வெளியில் தெரியாத வேதனைகள்
நிமிர்ந்த முதுகு
அவள்
நினைவுகளைச் சுமந்ததால்
நெஞ்சில் மட்டும்
கொஞ்சம் கூன்!
திமிர்ந்த உடல்
அவளை எண்ணி
தியங்கி கிடந்ததால்
கொஞ்சம்
தளர்ந்த நடை!
கரிய விழிகள்
அவள்
கனவுகளைச் சுமந்ததால்
நெருப்பாய் சிவந்த நிலையில்!
இதழ்களில் மௌனம்
இதயம் மட்டும்
எப்போதும்
அவளோடு
பேசிக்கொண்டே இருப்பதால் !
No comments:
Post a Comment