Saturday, September 24, 2011

tamil kavithai - sudum nilavu

சுடும் நிலவு!

வித்தகன்

நிலவென்று வர்ணித்து
நெருங்கிட நினைத்தாயோ?
நிலவுதான்!
இரவல் வெளிச்சம் ஆயினும்
இரவில் நானும் சூரியனே!
நிலவுதான்!
இரவில் வருவதால்
நானும் விலைமகள் அல்லவே!
நிலவுதான்!
நிலவில் கரையுண்டு- என்
நினைவில் கரையில்லையே!
நிலவுதான்!
நான் நிலவுதான்!
சுடும் நிலவு!

No comments:

Post a Comment