Saturday, September 24, 2011

kavithai

சமச்சீர் கல்வி

ராசை நேத்திரன்

கோனார் உரை எழுதி
படித்த காலம் தொலைத்து
நீதி மன்றம் உரை
எழுத காத்திருக்கிறது
இக்கால கல்வி.....
தீண்டிய பின் தான் சுடும்
நெருப்பும் தீண்டாமலே
சுடுகிறதே சமச்சீர் கல்வி
ஆங்கிலம் தொலைக்க
அரும்பாடுபடுகிறான் ஒரு
தமிழன், ஆங்கிலம் அழிந்தால்
தமிழ் அழியும் இன்னொரு
தமிழன்...
படி படி என்றால் ஒரு அம்மா
படிக்காதே படிக்காதே என்கிறது
இன்னொரு அம்மா...
இடையில் முழி பிதுங்கி நிற்கிறது
ஒன்றும் அறியாத பள்ளி
குழந்தை....

No comments:

Post a Comment